உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக வளாகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக வளாகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

கரூர்;க.பரமத்தி வட்டார கல்வி அலுவலக வளாகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தியில், வட்டார கல்வி அலுவலகம், 2013ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தின் கீழ், 106 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு, வட்டாரகல்வி அலுவலர், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் உள்பட 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலக வளாகத்துக்கு சுற்று சுவர் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், இரவு மற்றும் விடுமுறை தினங்களில் பலர் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் அலுவலக பாதுகாப்பு கருதி சுற்று சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களும்,அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை