உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அரவக்குறிச்சியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வடக்கு தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம், 53, என்பவர் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு கடையில், புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.அவரது கடையை சோதனை செய்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சையது இப்ராஹீமை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 6,750 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை