உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னிலை சாலையில் மணல் பரப்பால் விபத்து

தென்னிலை சாலையில் மணல் பரப்பால் விபத்து

அரவக்குறிச்சி: கரூரிலிருந்து, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், தென்னிலை வழியாக சென்று வருகின்றன. இதில், கடைவீதி பகுதியில், சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, தென்னிலை பகுதியில் உள்ள மணல் பரப்பை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ