மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாதனை
03-Sep-2024
மாவட்ட அளவிலான தடகளம்அரசு பள்ளி மாணவர்கள் சாதனைகுளித்தலை, அக். 2-கரூர் மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியில், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 14 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டி, கடந்த மாதம் குறு வட்ட அளவில் மாவட்ட முழுவதும் தனித்தனியாக நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இந்நிலையில், கரூர் காகிதபுரத்தில் உள்ள, டி.என்.பி.எல்., விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாணவிகள் பிரிவில், 110 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் மாணவி சத்யா முதல் பரிசு பெற்றார். 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மாணவர்கள் பிரிவில், 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் மோனிஷ், இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் புளோராராணி உள்பட உதவி தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
03-Sep-2024