உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மீண்டும் சிறையிலடைப்பு

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மீண்டும் சிறையிலடைப்பு

கரூர்: நிலம் அபகரிப்பு புகாரில், கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜய-பாஸ்கர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழிலதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அந்த வழக்கில் கரூரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த, 17ல் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த, 22 ல் திருச்சி மத்திய சிறையில் இருந்து, முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கரை, போலீசார் அழைத்து வந்து கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விஜயபாஸ்கரை, இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு கடந்த, 24ல் விஜயபாஸ்கரை, கரூர் ஜே.எம்.-1 நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தொழிலதிபர் பிரகாஷ், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், நிலம் அபகரிப்பு குறித்த புகாரில், வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்-கரை ஏழு நாட்கள், காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்-டனர். அப்போது, நீதிபதி பரத்குமார் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கினார்.இதையடுத்து, நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரை, மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு நாள், போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று இரவு வாங்கல் போலீசார் கரூர் ஜே.எம்.,-2 நீதிமன்றத்தில் விஜயபாஸ்கரை ஆஜர்ப்படுத்தினர். வழக்கை நீதிபதி மகேஷ் விசாரித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வரும், 31 வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வாங்கல் போலீசார் முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கரை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி