உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி

எருமப்பட்டி: கொல்லிமலை, சேலுார் நாடு பல்லக்குழிப்பட்டியை சேர்ந்தவர் சுரேந்தரன். இவரது மகன் நிதர்சன், 8. பல்லக்குழிப்பட்டியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். எருமப்பட்டி அடிவாரம் சிங்களகோம்பையில், நிலம் குத்தகைக்கு எடுத்து சுரேந்தரன் விவசாயம் செய்து வருகிறார். தந்தையை பார்க்க வந்த நிதர்சன், நேற்று இங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை