| ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
கரூர்: கல் குவாரி குறித்து, புகார் அளித்த லோக் ஜனசக்தி கரூர் மாவட்ட தலைவர் மீது, காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக, தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா தலை-மையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், க.பரமத்தி முன்னுார் கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். லோக் ஜனசக்தி கரூர் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் கடந்த, 21ல் கரூரி-லிந்து க.பரமத்தி நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, மூன்று கார்களில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்தனர். தண்ணீர் பந்தல் என்ற இடத்தின் அருகே சென்ற போது, இரு சக்-கர வாகனம் மீது மோதியதில், ஆறுமுகத்துக்கு பலத்த காயம் ஏற்-பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் விபத்தை ஏற்படுத்தி உள்-ளனர். க.பரமத்தி பகுதியில் செயல்பட்டு வரும், சட்ட விரோத-மான கல்வாரிகள் தொடர்பாக புகார் அளித்து வருகிறார். அவரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடத்துள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.