உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழப்பு

அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழப்பு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து உயிரிழந்தார்.குமாரபாளையம், பஜனை கோவில் வீதியில் உள்ள வடிகாலில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு குமாரபாளையம் சவக்கிடங்கில் வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவ்வழியே நடந்து வந்த நபர், நிலைதடுமாறி வடிகாலில் விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து குமாரபாளையம் அமானி வி.ஏ.ஓ., ரஞ்சித்குமார் புகார்படி, இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை