உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மருந்தாளுனர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

கரூரில் மருந்தாளுனர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

கரூரில் மருந்தாளுனர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்கரூர், டிச. 20-கரூரில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மருந்தாளுனர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.மாவட்ட குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். சிறப்பாளராக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி டீன் லோகநாயகி கலந்து கொண்டார்.கருக்கலைப்புக்கான மருத்துவ முறை, விற்பனையில் ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் இறப்புகளையும் தடுத்திட மருந்துகளை முறையாக, சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு கையாள வேண்டும். மருத்துவமனை இல்லாத மருந்தகத்தில், கருக்கலைக்கும் மருந்துகளை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யக்கூடாது. மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மருந்தகத்தில் சரியான கொள்முதல், விற்பவரின் விபரங்களை மருந்து ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்பதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும், தாய்வழி சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கும் குறித்து ஆலோசனை கூறப்பட்டது.நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் கவுரி சரவணன், கரூர் சரகம் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளர் லெட்சுமணன் தாஸ், கரூர் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை