உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது

மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது

கரூர்: கரூர் அருகே, மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த-தாக, பா.ஜ., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், நொய்யல் முத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 46; கரூர் மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி, 70, என்பவர் வளர்த்து வரும் மரக்கன்றுகளுக்கு, கடந்த, 4ல் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்-துள்ளார்.இதுகுறித்து, பத்மாவதி தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்தி-ரமடைந்த தனசேகரன், அவரது மனைவி புவனேஷ்வரி, 42, ஆகியோ ர் தகாத வார்த்தை பேசி, பத்மாவதியை அடித்துள்ளனர். இதனால், பத்மாவதி அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் தனசேகரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை