உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர் பணியில் சிறப்பு ஒதுக்கீடு பார்வையற்ற பட்டதாரி சங்கம் மனு

ஆசிரியர் பணியில் சிறப்பு ஒதுக்கீடு பார்வையற்ற பட்டதாரி சங்கம் மனு

கரூர்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பார்வையற்றோருக்கு, 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பார்வையற்றோருக்கு, 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, அந்த பணியிடங்களை சிறப்பு தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். அசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றோருக்கு, நியமனம் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி, தனியாக சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். அரசு கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு காத்திருக்கும், 100 பார்வையற்றோருக்கு உதவி பேராசியர் பணி வழங்க வேண்டும். அரசு துறையில் பணியாற்றும் பார்வையற்றோருக்கு வாகன ஊர்த்தி படி, 2,500 லிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ