வீட்டுக்குள் புகுந்து பணம், டிவி கொள்ளை: ஐந்து பேர் கைது
கரூர், அக். 16-கரூர் அருகே, வீட்டுக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி, எல்.இ.டி., 'டிவி' மற்றும் பணம் கொள்ளையடித்த, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு தீரன் நகரை சேர்ந்தவர் பூபாலன், 28; இவர் கடந்த, 12 மாலை குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த மணிகண்டன், 25; நிர்மல்குமார், 24; விபின், 25; கீர்த்திவாசன், 27; சையது அபுதாகீர், 31; ஆகிய ஐந்து பேர், பூபாலன் வீட்டுக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர்.பிறகு, வீட்டில் இருந்த எல்.இ.டி., 'டிவி', இரண்டு வெள்ளி கொலுசு, 2,500 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, பூபாலன் கொடுத்த புகார்படி, விசாரணை நடத்தி வெங்கமேடு போலீசார், மணிகண்டன் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.