உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழந்தை நல குழுக்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தை நல குழுக்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்: மாவட்டத்தில் குழந்தை நல குழுக்களுக்கு தலைவர், உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், குழந்தை நல குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம் அல்லது சமூக பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம் அல்லது மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 35-65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். குழந்தை நல குழு தலைவர் மற்றும் உறுப்பினராக நியமனம் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.இதற்கான விண்ணப்ப படிவத்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13 சாமி காம்ப்ளக்ஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில், கரூர் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குனர், சமூக பாதுகாப்புத்துறை, எண்-300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ