உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் அருகே போர்டு மீது கார் மோதல்: வாலிபர் பலி

வாங்கல் அருகே போர்டு மீது கார் மோதல்: வாலிபர் பலி

கரூர்: வாங்கல் அருகே, சாலையோரம் இருந்த போர்டு மீது கார் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் மனைவி கவிதா, 45; இவர், நேற்று முன்தினம் மகேந்திரா வெர்-டினோ காரில் மகன் ஆகாஷ், 28, இவரது நண்பர் தினேஷ், 27, ஆகியோருட ன், கரூர்-சேலம் சாலை மண்மங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார், 27, என்பவர் ஓட்டினார். அப்-போது, கார் திடீரென நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த போர்டில் மோதி நின்றது. அதில், காரில் பயணம் செய்த தினேஷ், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மேலும், காரில் பயணம் செய்த கவிதா, ஆகாஷ், கார் டிரைவர் செல்வகுமார் ஆகியோர் காயமடைந்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை