-கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 17 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகேயுள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. அதில் விவசாயிகள், 9,854 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 40.10 ரூபாய், அதிகபட்சமாக, 56.55 ரூபாய், சராசரியாக, 53.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,384 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து 77 ஆயிரத்து 746 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 204.01, அதிகபட்சமாக, 216.89, சராசரியாக, 215.89, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 133.69, அதிகபட்சமாக, 212.22, சராசரியாக, 183.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 7,971 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 15 லட்சம் என மொத்தமாக சேர்ந்து, 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.