உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில், வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தங்க வேல் ஆய்வு செய்தார்.இதில் ராசப்பட்டி கிராமத்தில், 10.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி கட்டுமான பணிகள், கொத்தப்பாளையத்தில், 31.70 லட்சம் ரூபாய் மதிப்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை பார்வையிட்டார். தடா கோவில் கிராமத்தில், மக்களிடம் இருந்து பெறப்படும் மட்கும் குப்பை மட்காத குப்பை தரம் பிரித்து, சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை இயந்திரம் மூலம் சிறிது துகள்களாக்கி, தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தும் பணி, கழுமேட்டுப்பட்டியில், 74.72 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் தனிநபர் குழாய் அமைத்து, அனைத்து குடியிருப்புக்கும் தினமும் முறையாக குடிநீர் வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, வெஞ்சமாங்கூடலுார், புங்கம்பாடி பஞ்., தலைவர்கள் ஜெயந்தி, தமிழரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை