முதல்வர் கோப்பை, குடியரசு தின போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, 351 மனுக்களை மக்கள் அளித்தனர்.இதை தொடர்ந்து, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், கரூர் மாவட்டம் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இறகுப்பந்து போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்ற மாணவி சாருமதி மற்றும் பாரதியார், குடியரசு தின ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எட்டு மாணவ, மாணவியர், 1 வெள்ளி பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களுக்கு கலெக்டர் தங்கவேல் பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., விமல்ராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சக்திபாலகங்காதரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் யுரேகா, கலெக்டர் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.