உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் தாலுகா அலுவலகத்தில், வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்-துறை சார்பில், வீட்டு மனை பட்டா வழங்ககோரி கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பிறகு மதியம், 1:00 மணிக்கு துணை தாசில்தார் சிவராஜ், காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என, தெரிவித்தார்.இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்-டது. காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்-தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முருகேசன், நகர மா.கம்யூ., கட்சி செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ