| ADDED : ஆக 06, 2011 02:16 AM
கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வேம்புசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியமும், பிரதி மாதம் 10ம் தேதி உணவீட்டு செலவினமும் வழங்க மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது, குறைவான குழந்தைகளை காரணம் காட்டி சத்துணவு மையங்களை மூடுவது மற்றும் துணை மையங்களுக்கு மற்ற மையங்களிலிருந்து உணவு கொண்டு செல்வதை தவிர்த்தல், சமையல் உதவியாளர்களுக்கு காலியாக உள்ள சமையலர் பணியிடங்களில் சமயலராக பதவி உயர்வு வழங்குதல், பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல், ஆறாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை அமைப்பாளர்களுக்கு மூன்றாவது தவணையும், சமையல் உதவியாளர்களுக்கு மூன்று தவணையையும் உடனடியாக வழங்குதல், காலியாக உள்ள சத்துணவு பணியிடங்களில் மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு மாறுதல் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் அங்கமுத்து, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பழனியம்மாள், மாவட்ட இணைச்செயலாளர்கள் பழனி, செல்வராஜ், ஒன்றிய தலைவர்கள் சுப்பிரமணியன், பிச்øகாரன், பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.