உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டியதால் விபத்து சைக்கிளில் சென்ற தி.மு.க., கிளை செயலர் பலி

கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டியதால் விபத்து சைக்கிளில் சென்ற தி.மு.க., கிளை செயலர் பலி

கெங்கவல்லி,'கூகுள் மேப்'பை பார்த்து காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது, தவறான பாதைக்கு திரும்பியதோடு, சைக்கிள் மீது மோதி, தோட்டத்தில் பாய்ந்து கார் நின்றது. இதில் சைக்கிளில் சென்ற, தி.மு.க., கிளை செயலர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காட்டை சேர்ந்தவர் நல்லாங்கியன், 60. தி.மு.க., கிளை செயலரான இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு, பள்ளக்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைக்கு, சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'இக்னிஸ்' கார் மோதியதில், துாக்கி வீசப்பட்ட நல்லாங்கியன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் கார் சாலையில் இருந்து, அருகே உள்ள தோட்டப்பகுதியில் உருண்டு கவிழ்ந்து சேதமடைந்தது. காரில் இருந்த இருவர் உயிர் தப்பினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சென்னை, நெசப்பாக்கத்தை சேர்ந்த, ஐ.டி., ஊழியர்கள் பிரவீன்குமார், 28, ராஜசேகர், 32. இவர்கள் கொல்லிமலை செல்ல, 'இக்னிஸ்' காரில், 'கூகுள்' மேப்பை பார்த்தபடி சென்றனர். பிரவீன்குமார் ஓட்டினார். ஆனால் ஆத்துார் பைபாஸ் சாலையில் இருந்து, ராசிபுரம் வழியே கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய நிலையில், ஆத்துார் - கெங்கவல்லி சாலைக்கு தவறுதலாக வந்துள்ளனர். அத்துடன் அதிவேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இதில் சைக்கிள் மீது மோதியதில் நல்லாங்கியன் உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்