உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி தே.மு.தி.க., மனு

கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி தே.மு.தி.க., மனு

கரூர், கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய சாவு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. சட்ட விரோத போதை பொருட்கள் விற்பனையை, அரசு தடுக்க தவறி விட்டது. இதனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 62 பேர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு ஏற்று, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடக்கிறது. இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை