உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பழையஜெயங்கொண்டத்தில் செம்மண் கட்டி துவரை உலர்த்தல்

பழையஜெயங்கொண்டத்தில் செம்மண் கட்டி துவரை உலர்த்தல்

கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டத்தில், நாட்டு துவரை பருப்பை செம்மண் கட்டி வெயிலில் உலர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் மானானாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்துள்ளனர்.சாகுபடி செய்யப்பட்ட துவரை செடிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் துவரை தரம் பிரிக்கப்பட்டு, அதனை பருப்பாக உருவாக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இதில் துவரை பருப்பு நல்ல சுவையுடன், சிவப்பு கலரில் இருக்கும் வகையில் நாட்டு துவரையில் செம்மண் கட்டி அதனை வெயிலில் உலர்த்தப்பட்டு வருகிறது.இது காய்ந்த பின், மிஷினில் அரைக்கப்படுகிறது.பின்னர் நாட்டு துவரம் பருப்பாக சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டு துவரம் பருப்பு நல்ல தரத்துடன் இருப்பதால், விவசாயிகள் இயற்கை முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை