மேலும் செய்திகள்
பாலுக்கு விலை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
18-Dec-2025
கரூர்: கரூரில், வாழைத்தார் விலை உயர்வு காரண-மாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில், வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரி-டப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டிகளுக்கு, விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நி-லையில், வாழைத்தார்களின் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்சியில் உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வாழை இலை, காய்கள், பழங்கள், மரங்கள் உள்ளிட்ட-வற்றிற்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு- விற்பனையான நிலையில், இந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்கப்-பட்டது. தேன்வாழை வாழைத்தார், 300 லிருந்து, 400 ரூபாய்க்கு விலை உயர்த்துள்ளது. ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய் என விலை மாற்றமில்-லாமல் விற்பனையானது.இவ்வாறு கூறினர்.
18-Dec-2025