உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்

சிறைவாசிகளுக்கு பரிசு வழங்கல்

கரூர், கரூர் மாவட்ட பொது நுாலக துறை சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழாவையொட்டி, கரூர் கிளை சிறையில் ஓவிய போட்டி நடந்தது.அதில், வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு, மாவட்ட கருவூல அலுவலர் கணேஷ் குமார், நற்சிந்தனையூட்டும் நுால்களை பரிசாக வழங்கி பேசியதாவது:சிறை வாழ்க்கை கடினமானது. புத்தக வாசிப்பு, சிறைவாசிகளின் மனதை பண்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள வாசிப்பு பழக்கம் பயன்படும். புத்தக வாசிப்பை, வாழ்வியல் நெறியாக மாற்றி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வாசகர் வட்ட தலைவர் சங்கர், டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜசேகர், லயன்ஸ் கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் சிவசுப்பிர மணியன், கிளை சிறை கண்காணிப்பாளர் முருகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை