கரூர்: கரூரில், அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தில், 11 பெண்கள் உள்பட, 50 பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்ப-ழகன் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதிக-ளின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்ப-டுத்த வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள, லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். 7வது ஊதிய குழுவில் நிதி பலன்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு, போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்-படாத, 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு, 25 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்-டதால், பெற்றோரை இழந்த வாரிசுகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மாநக-ராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., உள்பட பல அரசு துறைகளில் தனியார் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, அரசே நியமனம் செய்ய வேண்டும் உள்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்-தினர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன் கரூர் -திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 11 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்பாட்டத்தில், மாவட்ட செயலர் ஜெயராமன், மாநில துணைத் தலைவர் அம்சராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.