| ADDED : மார் 14, 2024 06:57 AM
கரூர்: கல்லுாரி மாணவர்களின், புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஹேக்கத்தான் போட்டிகளுக்கு பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கல்லுாரி பயிலும் மாணவர்களின், புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஹேக்கத்தான் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் இணையதளம் (https://www.edii-innovation.tn.gov.in/) வழியாக பெறப்படுகின்றன. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு ஹேக்கத்தான் போட்டிகள் நடக்கிறது.இதில் பங்குபெறும் மாணவர்கள், புத்தாக்க முறையில் சந்தைப்படுத்தக்கூடிய புதிய பொருட்களின் மாதிரிகளை உருவாக்க வேண்டும். இதில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 25 மாணவ அணிகளுக்கு முதல் பரிசு தலா ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. போட்டிக்கான மாணவர் கண்டுபிடிப்புகள் https://www.edii-innovation.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.புத்தாக்க சிந்தனைகளை பதிவு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 20 மாலை 5:00 மணி. எனவே மாணவர்கள் இதில் பங்கேற்க விரும்பினால், தங்களது கல்லுாரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தாமதம் இல்லாமல், மாணவர் வழி நடத்துனர் வழியாக புத்தாக்க சிந்தனைகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.