உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தலையில் காயமடைந்தவர் சாவு

தலையில் காயமடைந்தவர் சாவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே சவுந்தராபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் செந்தில்குமார், 44. இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 3ம் தேதி மாலை, 5:00 மணியளவில் செந்தில்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இதை பொருட்படுத்தாத செந்தில்குமார், நேற்று மதியம் வரை அவரது வீட்டின் அருகே கீழே கிடந்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து, செந்தில்குமாரின் மகள் தீபதர்ஷினிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவரை, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து தீபதர்ஷினி அரவக்குறிச்சி போலீசாருக்கு புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்