உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு போட்டிகள் துவக்கம்

கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு போட்டிகள் துவக்கம்

கரூர்: கரூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான, இரண்டு நாள் கலை போட்டிகள், மாவட்ட இசை பள்ளியில் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று, ஓவிய போட்டி மற்றும் கிராமிய நடன போட்டிகள் நடந்தது. அதில், 25 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இன்று குரலிசை போட்டி, கருவியிசை போட்டி, பரத நாட்டிய போட்டி நடக்கிறது.போட்டிகளில், 17 முதல், 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். கட்டணம் இல்லை. மாவட்ட அளவில் முதல் பரிசாக, 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 4,500 ரூபாய், மூன்றாவது பரிசு, 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.போட்டி தொடக்க விழாவில், இசை பள்ளி தலைமையாசிரியை ரேவதி, நடுவர்கள் ராஜேஸ்வரி, முத்துக்குமார் (ஓவியம்), ஆஷாபானு, மகாலட்சுமி (கிராமிய நடனம்) ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை