உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

கரூர்: சின்னதாராபுரம் அருகே நடந்த, பொதுக் கூட்டத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவதுாறாக பேசிய-தாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த இரண்டு தலைமை பேச்சாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர்., திடலில், 2023 செப்., 17ல், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா-துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்-கேற்ற அ.தி.மு.க., தலைமை பேச்சாளர்கள் சாம்ஸ் கனி, பேராவூ-ரணி திலீபன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, அவதுாறாக பேசியுள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., மகாமுனி கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் சாம்ஸ்கனி, பேராவூரணி திலீபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி