உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி

போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு;பெயின்டர் பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 47, பெயின்டர். இவருக்கு செல்வி, 34, என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தினந்தோறும் மது குடித்து விட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 14 காலை வீட்டில் இருந்தபோது, மது போதையில் வெங்கட்ராமன் தனக்கு தானாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு. சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி செல்வி, 34, கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை