உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது

போதையில் தொழிலாளி கொலை: கரூரில் பாசக்கார நண்பர் கைது

கரூர்: கரூர் அருகே, குடி போதையில் ஏற்பட்ட தகராறில், கூலி தொழி-லாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் முருகவேல், 35; இவர், கரூர் அருகே ஆண்டாங்கோவில் பகு-தியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் அண்ணாநகரை சேர்ந்த நண்பர் அசோக்குமார், 39, என்பவருடன், முருகவேல் மது அருந்த கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை அமராவதி ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த அசோக்குமார், கல்லால் அடித்து முருகவேலை கொலை செய்துள்ளார். இதுகுறித்து, கொலை செய்-யப்பட்ட முருகவேலின் தம்பி கணபதி, 35, கொடுத்த புகாரின்-படி, கரூர் டவுன் போலீசார், அசோக்குமாரை கைது செய்து விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்