உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துாய்மை பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கல்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் சமுதாய மன்றத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய ஆணையர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ., தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள், அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர்.குளித்தலை ஒன்றியத்தின், 13 ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக துாய்மை பணியாளர்கள் 83 பேருக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல், ஒன்றிய ஆணையர் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஸ்மார்ட் கார்டு வழங்கினர். முகாமில் கே.பேட்டை, வதியம் பஞ்., பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். பஞ்சாயத்து செயலாளர்கள். வருவாய் துறை. பொது சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை