உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழையால் தண்ணீர் நிரம்பி பயனில்லை

மழையால் தண்ணீர் நிரம்பி பயனில்லை

கரூர் : கோடை மழையால், பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிய போதும், பாசன வாய்க்கால் துார் வாரப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.கரூர் மாவட்டம், 1.50 லட்சம் ஏக்கரில் வேளாண் சாகுபடியும், 0.5 லட்சம் ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்படுகின்றன. நெல் ரகங்கள், 25,000 ஏக்கரிலும், சோளம், 70,000 ஏக்கரிலும் சாகுபடி நடக்கிறது. இது தவிர வாழை, வெற்றிலை, மஞ்சள், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் எண்ணைவித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, தென்னை உள்ளிட்ட பயர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றங்கரைகளில் இருந்து, 40 கி.மீ.,க்கு அப்பால் உள்ள தோகைமலை, தரகம்பட்டி, மாவத்துார், கடவூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் நீரின்றி வறண்ட நிலங்களாக உள்ளன. தற்போது பெய்த கோடை மழையால் கடவூர், தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் உள்ள குளங்களில், 40 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. 30 சதவீத குளங்கள், 70 சதவீத நீரையும், மீதமுள்ள 30 சதவீத குளங்கள், 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. ஆனால் நீர் நிரம்பியும் அந்த தண்ணீரை விவசாயிகளால் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:இந்த ஆண்டு கோடை மழை, மே மாதம் ஓரளவுக்கு நமக்கு கை கொடுத்தது. காட்டுவாரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொரணி குளம் உள்ளிட்ட குளங்களின் கரைகள் உடைந்தன. மாவட்டத்தின் பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 65 குளங்களில் கடந்த, 2005-ம் ஆண்டுக்கு பிறகு, 80 சதவீதம் வரை நீர் நிரம்பின. இங்கு, பாசனங்களுக்கு செல்லும் பெரும்பாலான பாசன வாய்க்கால்கள், துார்வாரப்படவில்லை. மேலும் குளங்களில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. குளங்களில் நீர் நிரம்பியும் அதனைப் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனிடையே தென்மேற்கு பருவ மழையும் தொடங்கிவிட்டது. விரைவில் பாசன வாய்க்கால்களை துார்வாரினால் மட்டுமே, குளங்களில் தேங்கியிருக்கும் நீரையும், இனி மழை பெய்யும்போது சேமிக்கப்படும் நீரையும் விவசாயிகள் பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை