உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம்

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம்

கரூர்: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், பங்காரு அடிகளாரின், 84வது அவதார திருவிழா நேற்று, தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரில் தொடங்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயம் ஏந்தி, கரூர் நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.பின், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், கஞ்சி கலயம் ஊர்வலம் நிறைவு பெற்றது. பஜனை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாக குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ