கரூர்: கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில், வாக்காளர்கள் தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்ய ஏதுவாக அமைக்கப்பட்-டுள்ள உதவி மையங்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்-கொண்டார்.அப்போது, அவர், கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 4 தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளரின் முழு விவரம் அடங்கிய கணக்கீட்டு படிவங்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்கியுள்ளனர். அதில், ஆதார் உள்ளிட்ட விவரங்கள், தந்தை, தாய், கணவர் அல்-லது மனைவியின் வாக்காளர் அட்டை விவரங்களை வாக்கா-ளர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அதனடிப்படையில், 2 நாட்க-ளாக மாவட்டத்தில் உள்ள 1,055 ஓட்டுச்சாவடி மையங்களி-லும் சேவை மையங்கள் அமைத்து, வாக்காளர்களுக்கு கணக்-கீட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு பிறகு இடம் பெற்றிருந்த, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வரிசை எண், சட்டசபை தொகுதி மற்றும் எண், பாகம் எண், அப்போ-தைய வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களை பதிவு செய்யலாம். வாக்காளரின் விவரம் கிடைக்காவிடில், அதே பட்டியலில் உள்ள தாய் அல்லது தந்தை, தாத்தா அல்லது பாட்டி ஆகியோரின் விவரங்களை பதிவுசெய்து கையொப்பமிட்டு வழங்கலாம். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிலுள்ள வாக்காளர்கள் விபரங்களை சரி பார்த்து, வாக்காளர் விவரங்களை வாக்காளர்களுக்கு பூர்த்தி செய்து கொடுப்பர். வயதான வாக்காளர்கள், எழுத படிக்க தெரியாத வாக்காளருக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களே படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பர்.இன்னும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் இருப்பதால், விடுபட்ட வாக்காளர்கள், பூர்த்தி செய்த மற்றும் முழுவதும் பூர்த்தி செய்யாத படிவங்களை எடுத்துச்சென்று, முறையாக பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அவர், கூறினார்.