உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவர்கள் கடும் அவதி கி.புரம் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை

மாணவர்கள் கடும் அவதி கி.புரம் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை

லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் சிவாயாம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோடங்கிபட்டி அரசு தொடக்கப்பள்ளி, பாப்பாகப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, பலாப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, கள்ளப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிகளில் காவிரி குடிநீருக்கான இணைப்பு இருந்தும் சரிவர குடிநீர் சப்ளை ஆவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளில் கழிப்பிட வசதிகளும் செய்யப்படவில்லை மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு அருகில் உள்ள திறந்வெளியிடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் பராமரிப்பு நிதியை முறையயாக செலவு செய்ய தலைமையாசிரியர்கள் முன் வரவேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில், உடனடியாக வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை