உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட 5 பஞ்., தலைவர்கள் அமராவதியில் நீர் விட கலெக்டரிடம் கோரிக்கை

கரூர் மாவட்ட 5 பஞ்., தலைவர்கள் அமராவதியில் நீர் விட கலெக்டரிடம் கோரிக்கை

கரூர்: 'குடிநீர் பிரச்சனை யை தீர்க்க அமராவதி ஆற்றில் தண்ணீர் விட வேண்டும்' என ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தனர்.மனுவில் உள்ளதாவது: ண்டாங்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு, பள்ளப்பாளையம், கருப்பம்பாளையம், அத்திப்பாளையம் ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் கிணறுகள் வறண்டு போய் விட்டன. இதனால் பொதுமக்களுக்கு உரிய குடிநீரை சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசிடம் பேசி, அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து தலைவர் செல்வி, பள்ளப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், அத்திப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, கருப்பம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை