உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மண்ணெண்ணெய் நிரப்பி வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு பதிவு

மண்ணெண்ணெய் நிரப்பி வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை : குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன், 54. இவர் தரகம்பட்டி ஆசாரி தெருவில் காய்கறி வைத்துள்ளார்.கடந்த, 15ல் மேட்டுப்பட்டியில், 18 பட்டி கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில், கரகம் விடும்போது இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. மறுநாள் ஊர் முக்கியஸ்தர்கள் இரு தரப்பினையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பாண்டியன், அவரது மனைவி இருவரும் காய்கறி கடையில் இருந்தனர். அப்போது கடைக்கு முன்பாக, கோவில் பிரச்னை செய்த இருவர், நெருப்பை பற்ற வைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து யார் நீங்கள் என பாண்டியன் கேட்டுள்ளார்.அப்போது ஒருவர் கடையை நோக்கி, ஒரு பாட்டிலை வீசியபோது, பாட்டில் கல்லாப்பெட்டியில் பட்டு காய் மூட்டையில் விழுந்தது. ஆனால் தீ பிடிக்கவில்லை. அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவருடன் வந்த இருவர், தயார் நிலையில் வைத்திருந்த பைக்கில் தப்பினர். கடையில் கிடந்த பாட்டிலை பார்த்தபோது, அதில் சிறிதளவு மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.பாண்டியன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத, மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை