கொங்கு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்
கரூர், கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.மாணவி ரிது ஹரிணி, 600க்கு, 575 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவன் சந்தோஷ், 600க்கு 559 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவி மெகஸ்ரீ 600க்கு 546 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 500 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்றுள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், 450 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது, அறக்கட்டளை செயலாளர் சண்முகம், அறக்கட்டளை துணைத் தலைவர் சங்கம் மனோகரன், பள்ளி தாளாளர் பாலுகுருசுவாமி உள்பட பலர் உடனிருந்தனர். பள்ளி முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்-------.