உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், சாதாரண கூட்டம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமையில் நடந்தது. இதில் பிறப்பு, இறப்பு குறித்த பதிவுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. வார்டு எண் 2ல், அரசவள்ளித்தெருவில் சமு-தாய கழிப்பிடம் கட்டுதல், வார்டு எண் 7ல் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான கருத்துரு தயார் செய்து, நிர்வாக அனுமதி பெறும் பொருட்டு கட்டமைப்பு வடிவமைப்பு செய்வ-தற்காக கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கான செலவு மன்றத்தில் வைக்கப்பட்டது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை