உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் லால் சலாம் படம் வெளியீடு: ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடிப்பு

கரூரில் லால் சலாம் படம் வெளியீடு: ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடிப்பு

கரூர்: கரூரில், லால் சலாம் படம் வெளியான தியேட்டரில், ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லால் சலாம் என்ற திரைப்படம் நேற்று வெளியானது.அந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்துள்ளார். கரூரில் அமுதா மற்றும் அஜந்தா ஆகிய இரு தியேட்டர்களில் லால் சலாம் படம் வெளியானது. இதையடுத்து, கரூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், பொறுப்பாளர் ரவி தலைமையில், ரசிகர்கள் அமுதா, அஜந்தா ஆகிய தியேட்டர்கள் முன், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி