மேலும் செய்திகள்
உடையும் மின்கம்பங்கள் உயிர் பயத்தில் விவசாயிகள்
21-Oct-2024
தென்னிலை அருகே சாய்ந்த நிலையில் மின் கம்பங்கள்: பொதுமக்கள் பீதிகரூர், நவ. 19-கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு பஞ்சாயத்து, தொப்பம்பட்டியில் ஏராளமான வீடுகள், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. சிறிய அளவிலான கடைகளும் உள்ளன. இந்நிலையில், தொப்பம்பட்டி பகுதியில் பொதுமக்களின் மின் தேவையை, பூர்த்தி செய்யும் வகையில், மின் கம்பங்கள் அமைக் கப்பட்டுள்ளன.பல மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால், காற்று அதிகளவில் வீசும் போது, சாய்ந்த மின் கம்பங்கள் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில், அந்த பகுதியினர் உள்ளனர். மேலும், மின் கம்பங்களில் விளக்குகள், இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை என, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது.எனவே, தென்னிலை கிழக்கு பஞ்சாயத்து, தொப்பம்பட்டியில் சாய்ந்த நிலையில் உள்ள, மின் கம்பங்களை சீரமைத்து, விளக்குகளை இரவு நேரத்தில் எரியும் வகையில், மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Oct-2024