உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; மானிய விலையில் பொருள் வழங்கல்

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்; மானிய விலையில் பொருள் வழங்கல்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் கிராமத்தில் வேளாண்மை துறையின், துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.பின், விவசாயிகளுக்கு தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள், வம்பன்- 8, வம்பன் -10 உளுந்து, எள் விஆர்ஐ 3, விதைகள், அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பாஸ், பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), உயிர் உரங்கள், உயிர் பூசண கொல்லிகள், நுண்ணூட்ட சத்துக்கள், ஆர்கானிக் உரங்கள், வேளாண் கருவிகள், விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கினார்.இந்நிகழ்வில் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தனபால், அருள்குமார், இளநிலை உதவியாளர் (பிணையம்) தங்கராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை