உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழில் மையம ்சார்பில் கடனுதவி வழங்கும ்விழா

தொழில் மையம ்சார்பில் கடனுதவி வழங்கும ்விழா

கரூர்: கரூர் மாவட்ட தொழில் மையம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அரசு மான்யத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. அதில், மகளிர் திட்டம், வேளாண்மை துறை, வேளாண் விற்பனை துறை, கால் நடை துறை, கைத்தறி துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கூட்டுறவு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் சார்பில், 1,062 பயனாளிகளுக்கு, 107.28 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட கடனுதவிக்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை டி.ஆர்.ஓ., கண்ணன் வழங்கினார்.மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், சி.ஐ.ஐ., தலைவர் செந்தில் சங்கர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் ஆறுமுகம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி