உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா

மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா

குளித்தலை:குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கேப்டன் நகரில், புதிதாக மகா கணபதி கோவில் கட்டுவது என, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்திட, நேற்று முன்தினம் காலை ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குட ங்களை கோவிலுக்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து, கோவில் மேல் உள்ள கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மகா கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும், விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை