உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாலையம்மன் கோவில் திருவிழா குடிபாட்டுக்காரர்கள் சுவாமி வழிபாடு

மாலையம்மன் கோவில் திருவிழா குடிபாட்டுக்காரர்கள் சுவாமி வழிபாடு

குளித்தலை: கள்ளை பஞ்., மாலைமேடு பகுதியில் அமைந்துள்ள மாலையம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான குடிபாட்டுக்காரர்கள் வழிபாடு நடத்தினர்.குளித்தலை அடுத்த கள்ளை பஞ்., மாலைமேடு கிராமத்தில் பெத்தகாப்பு கரை, பொதிகாப்பு கரை, பூசாரி கரை, தலையாரி கரை, கோடங்கி கரை, கம்புளி கரை, தாசிரி கரை ஆகிய, ஏழு கரைகாரர்களுக்கு பாத்தியப்பட்ட, 500 ஆண்டு பழமையான மாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தை, 4ல் குடிபாட்டுக்காரர்கள் திருவிழா நடத்தி, எருதுகளை ஓடவிட்டு வழிபடுவது வழக்கம்.இதேபோல், இந்தாண்டு திருவிழா, அறங்காவலர் குழு தலைவர் பெரியசாமி தலைமையில் இரண்டு பிரிவாக நடந்தது. காலை, 5:00 முதல் மதியம், 12:00 மணி வரை, கூடலுார் பஞ்., தொப்பநாயக்கன்பட்டி பெத்தகாப்பு வகையறாக்களை சேர்ந்த குடிபாட்டுக்காரர்கள் வழிபட்டனர்.பின், சுவாமி மாடுகளை கோவில் முன் ஓடவிடும் மாலைதாண்டும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, பாரம்பரியமிக்க தேவராட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி