உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிசிடிவி, டி.வி.ஆர்., திருடிய ஒருவர் கைது

சிசிடிவி, டி.வி.ஆர்., திருடிய ஒருவர் கைது

கரூர், கரூரில், 'சிசிடிவி', டி.வி.ஆர்.,களை திருடியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மனோகரா கார்னர் பகுதியில், தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், 'சிசிடிவி' கேமரா மற்றும் டி.வி.ஆர்.,கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்., 24ல், கரூர் மனோகரா கார்னரில் வைக்கப்பட்டிருந்த, நான்கு டி.வி.ஆர்., கள் மற்றும் நான்கு சுவிட்ச் பாக்ஸ்களை காணவில்லை. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்து, தனியார் நிறுவன மேலாளர் பிரசாத், 21, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, டி.வி.ஆர்., களை திருடியதாக கரூர் பாலமருதப்பட்டி பகுதியை சேர்ந்த ரவீந்திரன், 42; என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ