உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணவாசி - எழுதியாம்பட்டி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அவதி

மணவாசி - எழுதியாம்பட்டி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அவதி

கரூர்: மணவாசி - எழுதியாம்பட்டி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், மணவாசி முதல் எழுதியாம்பட்டி சாலை வழியாக பழையஜெயங்கொண்டம், மாயனுார், மணவாசி, எழுதியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் கரூர் நகர் பகுதிக்கு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:இங்கிருந்து கரூருக்கு செல்ல முக்கிய சாலை சீரமைக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த சாலையில் செல்லாமல் முனையனுார் சாலையிலோ, கிருஷ்ணராயபுரம் சாலையிலோ சென்றால், 10 கி.மீ., தொலைவு சுற்றித்தான் கரூருக்குச் செல்ல முடியும். மேலும் எங்கள் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. விவசாய இடுபொருள்களை நகரில் இருந்து வாங்கி வருவதற்கும், அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை, உளுந்து போன்ற மூட்டைகளை இருசக்கர வாகனங்களில் கரூரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லவும் முடியாமல் தவித்து வருகிறோம். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி