உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் திருடிய மெக்கானிக் கைது

பைக் திருடிய மெக்கானிக் கைது

கரூர், கரூர் மாவட்டம், சுக்காலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜய், 23; பெயின்டர். இவர், கடந்த, 9ல் இரவு வீட்டுக்கு முன், 'யமஹா' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, விஜய் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பைக்கை திருடியது, திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியை சேர்ந்த, மெக்கானிக் சக்தி சரவணன், 22, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சக்தி சரவணனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை