உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரியும் மொபைல் போன் திருடர்கள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரியும் மொபைல் போன் திருடர்கள்

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், வெளியூர் பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களிடம் மொபைல் போன் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பீதியடைந்துள்ளனர்.தமிழகத்தில், தொழில் நகரமான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடம், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளன. மேலும், குடிநீர் வசதி, மழை, வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், வெளியூர் பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களிடம் மொபைல் போன் திருடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் பஸ்சில் ஏறும்போது, அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல் போன்களை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இல்லை. காலை நேரங்களில், போலீசார் பெரும்பாலும் ரோந்து பணியில் இருப்பது இல்லை. இதனால், மொபைல் போன் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைத்து, நாள்தோறும் போலீசாரை, பணியில் நியமித்து, காலை நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்டில், ரோந்து பணியில் ஈடுபட வைப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vijay
ஏப் 01, 2024 10:13

அண்னே, அய்யா, எப்படியாச்சும் புது பஸ் ஸ்டான்ட் அமைக்கும் வேலைய சீக்கிரம் ஆரம்பிச்சு சீக்கிரமா முடிங்க, புண்ணியமா போகும் சின்ன நகரங்களில், மற்ற ஊர்களில் எல்லாம் புது பஸ் ஸ்டான்ட் கட்டி முடிச்சு திறக்கப்போறாங்க கருவூரில் மட்டும்தான் நிலப்பிரச்சினை, அரசியல்வியாதிகளின் சொந்த நிலங்கள், சுய தொழில் பிரச்சினை இவற்றால் ஒரு புது பஸ் ஸ்டான்ட் கட்ட பிரச்சினை மேல் பிரச்சினை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி